தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர் பணிகள்

Published on: June 10, 2025
Join WhatsApp
Join Now
Join Telegram
Join Now
---Advertisement---


தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர் பணிகள்: தமிழகத்தில் கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு மற்றும் மதிப்பெண்கள் வழங்கும் விதிமுறைகளில் மாற்றம் செய்து, புதிய வழிகாட்டுதல்களை தமிழக வருவாய்த்துறை வெளியிட்டுள்ளது

புதிய விதிமுறைகளின்படி:

  • கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் SSLC தேர்வில் தமிழை ஒரு பாடமாக எடுத்திருக்க வேண்டும். மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதற்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

  • இருசக்கர வாகன உரிமம்: உரிமம் இருந்தால் தேர்வு தேவையில்லை. மிதிவண்டி/வாகனம் ஓட்டும் திறன் இருந்தால், தேர்வு நடத்தப்பட்டு அதற்கும் 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

  • தமிழ் மொழி திறன்: வாசித்தல் மற்றும் எழுதுதல் ஆகிய திறன்களுக்கேற்ப, நேரில் பரிசோதிக்கப்பட்டு 30 மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்.

  • வசிப்பிடம்: அதே கிராமத்தில் இருப்பவருக்கு 35 மதிப்பெண்கள், தாலுகா எல்லைக்குள் இருப்பவருக்கு 30 மதிப்பெண்கள் வழங்கப்படலாம்.

  • நேர்காணல்: வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் பிற அலுவலர்கள் அடங்கிய குழுவினரால் நடத்தப்படும் நேர்காணலுக்காக 15 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • ஒட்டுமொத்த செயல்திறன்: விண்ணப்பதாரரின் தனிப்பட்ட திறன்களை கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் 6 முதல் அதிகபட்சம் 12 மதிப்பெண்கள் வழங்கப்படலாம். 6-ஐ விட குறைவாகவோ, 12-ஐவிட அதிகமாகவோ மதிப்பெண்கள் வழங்கக்கூடாது.

மேலும், நியமன அறிவிப்புகள் உரிய விதிகளின்படி வெளியிடப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும். தேர்வு முறைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டதா என அவர்கள் உறுதி செய்த பின்பே முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். விதிகளை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

TN Village Assistant G.O. Tamil – PDF Download 


2025-06-10 08:38:29

Leave a Comment